செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடியான உத்தரவு… !!

Author: Babu Lakshmanan
28 June 2023, 1:01 pm
Senthil Balaji - Updatenews360
Quick Share

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து, அவர் வகித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வருகிறார். இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன் பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது ;- கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. த

ற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், எனவே இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.

Views: - 257

0

0