தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
Author: Udayachandran RadhaKrishnan30 செப்டம்பர் 2024, 10:28 காலை
தியாகம் என்ற சொல் சமீப நாட்களாக சர்ச்சையில் உள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று தனது X தள பக்கத்தில் வாழ்த்து கூறியிருந்தார்.
மேலும் தியாகம் செய்த செந்தில் பாலாஜி என குறிப்பிட்டிருந்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தியாகம் என்கிற சொல்லுக்கே மரியாதை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அமைச்சரவையில் இடம்பெற்ற செந்தில் பாலாஜிக்கு, மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டது. மீண்டும் அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு எதிராக, ஆதரவாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்க : திமுகவிற்காக ராகுல் தியாகம் செய்வாரா…? காங்கிரஸ் மூத்த தலைவர் போட்ட குண்டு..! அதிர்ச்சியில் டெல்லி மேலிடம்…!!
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது X தளப்பதிவில், “திரு. செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது’ என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ?
உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும் என பதிவிட்டுள்ளார்.
0
0