அன்றைக்கு விமர்சனம் பண்ணுனாங்க… ஆனா, இப்ப பாஜகவோட பி டீமாக மாறிய திமுக : கமல்ஹாசன் காட்டம்…!!

Author: Babu Lakshmanan
25 April 2022, 1:01 pm
Quick Share

சென்னை : பாஜகவோட பி டீம் திமுகதான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் தொண்டர்களிடையே உரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது :- கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியலில் உறவும் தேவையில்லை. எதிரியும் தேவையில்லை. நல்லது நடக்கும்போது பாராட்டுவதும், நடக்காதபோது விமர்சிப்பதும் எங்கள் நோக்கம்.

என்னை பாஜகவின் பி டீமாக இருக்கிறார்கள். ஆனால் விமர்சனம் செய்தவர்கள் தான் தற்போது பாஜகவின் பி டீமாக ஆக உள்ளனர். நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு சாலை எல்லாம் சாக்கடை ஓடும் வழித்தடமாக மாற்றி மக்கள் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள்.

6 முறை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகம் என்பது ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் இருக்கின்றது. நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு சாலை எல்லாம் சாக்கடை ஓடும், வழித்தடமாக மாற்றி மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள், என்று கூறினார்.

Views: - 642

0

0