மக்களை ஏமாற்ற எனக்கும் தெரியும்… தரமற்றவர்கள் கையில் ஆட்சியும், அதிகாரமும் ; சீமான் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 8:48 am
Quick Share

விருதுநகரில் காமராஜரை தோற்கடித்தது திமுக அல்ல எனவும், தமிழ் தான் தோற்கடித்தது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ‘நாம் தமிழர் கட்சி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழகத்தில் உண்மையான காமராசர் ஆட்சி வர வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கூறினார். மேலும், ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற எனக்கு மனசு வரமாட்டேங்குது என தெரிவித்த அவர், எனக்கும் டெக்னிக்காக ஏமாற்றத் தெரியும், என்றார். பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை சொல்லிவிட்டு போவது தானே என பேசிய சீமான், கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் தான் நாட்டில் இருக்கிறார் என விமர்சனம் செய்தார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இலவசம் என்பது இல்லை எனவும், கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக தருவோம் என்றார். அதிமுகவில் உள்ளவர்கள் அப்போலோவுக்கும், திமுகவில் உள்ளவர்கள் காவிரி மருத்துவமனைக்கும் செல்கிறார்கள் என்றால், ஏன் அரசு மருத்துவமனைகளை கட்டி வைத்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அரசை நடத்துபவர்களே அரசு பள்ளியில் படிப்பதில்லை எனவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இல்லை என்றால், தரமற்ற போச்சு என்று அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள் என்றார். காரணம் என்னவென்றால் தரமற்றவர்கள் கையிலே அதிகாரத்தை கொடுத்தது தான் என்றார். மேலும், உலகத்தில் இருக்கும் அரசுகள் நடத்துவது எல்லாம் தரமாக உள்ளது எனவும், இந்தியாவில் மட்டுமே அரசு நடத்துவது கேவலமாக உள்ளது, என்றார்

எத்தனை வாக்குறுதிகளை இந்த ஆட்சியாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் எனவும், அதில் ஒன்றை ஆவது நிறைவேற்றி இருக்கிறார்களா..? அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் நாட்டில் வறுமை இருந்திருக்காது, எனக் கூறினார்.

விருதுநகரில் காமராஜரை தோற்கடித்தது திமுக அல்ல எனவும், தமிழ் தான் தோற்கடித்தது என்றார். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவச்சலம் இந்தி திணிப்பை ஏற்றுக் கொண்டதால், தமிழ் காமராஜரை தோற்கடித்தது என்றார். தற்போது தமிழ் செத்து போய் விட்டது எனவும், தமிழ்நாட்டிலே ஏட்டிலே எங்கும் தமிழ் இல்லை எனவும், பயிற்று மொழி, பண்பாட்டு மொழி, வழிப்பாட்டு மொழி என எதிலும் இல்லை என் தாய் மொழி எனக் கூறினார். மேலும், தமிழை மீட்டிறுவாக்கம் செய்து வாழ வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமென சீமான் பேசினார்.

Views: - 237

0

0