அமைச்சர் பதவியை தூக்கியெறிந்த நமச்சிவாயம்… மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா : களேபரமாகும் புதுச்சேரி காங்கிரஸ்…!!!

25 January 2021, 1:45 pm
Congress namachivayam 11 - updatenews360
Quick Share

காங்கிரஸ் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம், அமைச்சர் மற்றும் எம்எல்ஏ புதுச்சேரி காங்., தலைவர் ஏவி சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளவர் நமச்சிவாயம். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நமச்சிவாயத்தை முன்னிலைபடுத்தி காங்., திமுக கூட்டணி தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்தது.

பின்னர், முதலமைச்சராக கட்சி தலைமை நாராயணசாமியை தேர்வு செயது நமச்சிவாயத்தை அமைச்சராக்கியது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். இதனிடையே கடந்த ஆண்டு நமச்சிவாயம் வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், மேலும் அதிருப்தி அடைந்த அவர் கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அவ்வப்போது கட்சி தலைமை சமாதானப்படுத்திய நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

வரும் 30ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரவுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியில் அமைச்சர் நமச்சிவாயம் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, காங்கிரஸ் இருந்து அமைச்சர் நமச்சிவாயத்தை தற்காலிக நீக்கம் செய்து புதுச்சேரி காங்., தலைவர் ஏவி சுப்ரமணியம் அறிவித்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியின் உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்தார். அவருடன், மேலும் ஒரு எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அளித்துள்ளார்.

ஏற்கனவே, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய அமைச்சரும், நிர்வாகியுமான நமச்சிவாயம் உள்பட இரு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0