நீட் தேர்வு விவகாரம்… திமுக அரசுடன் உச்சகட்ட மோதல் ; அவசர அவசரமாக டெல்லி கிளம்பும் ஆளுநர் ஆர்என் ரவி…!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 9:06 am
RN RAvi - Udpatenews360
Quick Share

நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம், செந்தில் பாலாஜி கைது ஆகியவற்றால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக ஆளுநர் ஆளுநர் ஆர்என் ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழக அரசுக்கும், அவருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. நீட் ரத்து மசோதாவை நிறுத்தி வைத்தது, அரசு நிகழ்ச்சிகளில் இந்துத்துவா சித்தாந்தங்களை பேசுவது என தமிழக அரசுக்கு ஆளுநர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில், தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து ஆளுநர் ஆர்என் ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால், கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த உத்தரவை அவர் வாபஸ் பெற்றார்.

இதனிடையே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ராஜ்பவனில் நடந்த கலந்துரையாடலின் போது,
நீட் தேர்வு ரத்து மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆளுநர் ரவியின் இந்த கருத்து திமுக உள்ளிட்ட ஆளும் கட்சியினரிடையே மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரியும் திமுக இளைஞர் அணி சார்பாக, வரும் 20ஆம் தேதி தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ரவி இன்று காலை டெல்லி செல்ல உள்ளார். டெல்லி செல்லும் அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலவரம் தொடர்பாகவும், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிப்பார் என்று தெரிகிறது. அப்போது, நீட் தேர்வு மசோதா தொடர்பாகவும், செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பாக சட்டத்துறையிடம் ஆலோசனை கேட்பார் என தெரிகிறது.

Views: - 226

0

0