நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழகம் ரொம்ப மோசம்… பாதிக்கு பாதி தான் தேர்ச்சி… தேசிய அளவில் தமிழக மாணவன் 30வது இடம்…!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 10:16 am
Cbe Neet Exam- Updatenews360
Quick Share

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

இதற்கான முடிவுகள் நேற்றிரவு வெளியானது. இதில், நாடு முழுவதும் மொத்தம் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 56.28 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவரி தனிஷ்கா முதலிடத்தைப் பிடித்தார். இவர் நீட் தேர்வில் 99.99 மதிப்பெண்கள் எடுத்தார். டெல்லியைச் சேர்ந்த மாணவி வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வது இடத்தைப் பிடித்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிகளவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 51.3% தேர்ச்சி பெற்றதன் மூலம் கடந்தாண்டை விட இந்தாண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைவாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த திருதேவ் விநாயகா என்ற மாணவன் 705 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 30வது இடமும், ஹரினி 702 மதிப்பெண்களுடன் 43வது இடத்தை பிடித்துள்ளனர்.

Views: - 326

0

0