காவ்யா மாதவன் தான் மாஸ்டர் மைண்ட்?…கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திருப்பம்: வெளியான ஆடியோ ஆதாரம்..!!

Author: Rajesh
10 April 2022, 12:10 pm

கேரள திரைப்பட நடிகை தாக்கப்பட்ட வழக்கில்  நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு என்பதை நிரூபிக்கும் செல்போன் உரையாடல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா பிரபல திரைப்பட நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு என குறிப்பிடும் செல்போன் ஆடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் திலீப்பின் சகோதரி கணவன் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
விசாரணைக் குழுவினர்  இந்த  மூன்று செல்போன் உரையாடல்களை  நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து கேரளா, கொச்சி குற்றப்பிரிவு போலீசார் மேல் விசாரணைக்காக வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
………………….

கேரள திரைப்பட நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு என்பதை கூறும் வகையில் செல்போன் உரையாடல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பிரபல நடிகை அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகையின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6 முக்கிய குற்றவாளிகள், நடிகையின் கார் ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், தற்போது செல்போன் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்ந்து விசாரணைக்காக திங்கள்கிழமை நேரில் ஆஜராக கொச்சி குற்றப்பிரிவு போலீசார் நடிகை காவ்யா மாதவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் திலீப்பின் சகோதரி கணவன் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விசாரணைக் குழுவினர் இந்த மூன்று செல்போன் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கேரளா, கொச்சி குற்றப்பிரிவு போலீசார் மேல் விசாரணைக்காக வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!