செந்தில் பாலாஜிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மக்களுக்கு இல்ல… டிஐஜி சம்பவத்திற்கு CM ஸ்டாலின் ஏன் போகல… தெறிக்கவிட்ட சீமான்..!!

Author: Babu Lakshmanan
11 July 2023, 5:01 pm

ராமநாதபுரம் ; தான் முதலமைச்சரானால் மீனவர்களுக்கு வெடிகுண்டு, ஆயுதங்கள் கொடுத்து அனுப்புவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள ரெகுநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘எங்கள் மண்.. எங்கள் உரிமை’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண் இளங்கோ தலைமை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது அதை மீட்டே தீருவோம். தமிழக அரசு மதுபான விற்பனையில் தீவிரம் காட்டி வருகிறது. குவாட்டர் பாட்டிலில் பாதியை சிறிய பாட்டில் போட்டு விற்பனை செய்வது குறித்து பல்வேறு ஆய்வு கட்ட பணிகள் நடத்தபட்டு வருகிறது. செந்தில் பாலாஜிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக மக்களுக்கு கொடுப்பது இல்லை.

டிஐஜி விஜயகுமார் உயிர் நீத்த நிகழ்வுக்கு செல்லாத முதலமைச்சர் ஸ்டாலின்,செந்தில் பாலாஜி கைது செய்த போது படைபட்டாளத்தோடு மருத்துவமனையில் காத்துக் கிடக்கிறார்.

இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்று வருவதை வன்மையாக கண்டித்து பேசினார். மேலும், நான் முதல்வரானால் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் கையில் வெடிகுண்டு, அதி நவீன ஆயுதம் கொடுத்து அனுப்புவேன். ஒவ்வொரு படகிலும் பயிற்சி பெற்ற இரண்டு வீரர்கள் கூடுதலாக அனுப்பப்படும், எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!