மாநாடு நடத்த உண்டியல் பணம் வசூல் : ஓபிஎஸ் அணி – கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் ; வேட்டி கிழந்த பரிதாபம்!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 9:54 am

ராமநாதபுரம் : முதுகுளத்தூரில் ஓபிஎஸ் அணியினருக்கும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தனது கட்சி நிர்வாகி உடன் கணேசன் புதுக்கோட்டையில் நடக்கும் மாநாட்டிற்கு செல்வதற்காக உண்டியலை வைத்து, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் தரப்பினரிடம் சென்று மாநாட்டிற்கு செல்ல உண்டியல் பணம் போடுமாறு கேட்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த செந்தூர்பாண்டியன், முத்துசாமி, போஸ் ஆகிய மூன்று நபர்கள், நீங்கள் திமுகவிடம் பணத்தை வாங்கி பிழைப்பு நடத்தும் போது, தங்களிடம் இருந்து எதற்கு பணம் கேட்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, இரு தரப்பிற்கிடையே வாக்குவாதம் ஆகி கைகலப்பாக மாறி உள்ளது.

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலேயே இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அருகில் கிடந்த கம்புகளை வைத்து மாறி மாறி தாக்கிக் கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் கொடுத்த புகார் அடிப்படையில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த செந்தூர் பாண்டியன், முத்துச்சாமி, போஸ் ஆகிய மூன்று நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://player.vimeo.com/video/793562583?h=a6d461f097&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!