திமுகவுடன் ஓபிஎஸ்-க்கு ரகசிய தொடர்பா..? உண்மையிலேயே திமுகவின் கைக்கூலி யார் தெரியுமா..? கோவை செல்வராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 4:30 pm

திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ரகசிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த பிறகு, அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் பேசியதாவது :- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் , துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கடந்த வாரம் ஓபிஎஸ் திமுகவை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், முனுசாமி மகன் எம். சதீஷ்க்கு கிருஷ்ணகிரியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இடம் 99 ஆண்டு வாடகைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் வழங்கி அமைச்சர் காந்தி சதீஷ்க்கு பெட்ரோல் பங்க்கை கடந்த 25.5.22ல் திறந்து வைத்துள்ளார்.

அதிமுக ரகசியங்களை முனுசாமி திமுகவிற்கு கூறுகிறார். திமுகவின் கைக்கூலியாக வேலை செய்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவில் உள்ள 7 முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தினர். அவர்கள் தங்களை நிரபராதி என சொல்லும் வரை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும், கட்சிப் பதவியை விட்டு விலக வேண்டும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் லஞ்சம் குடும்ப அரசியலை எதிர்க்கும் இயக்கமாக அதிமுக இருக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இல்லம் முன்பு அப்பாவி தொண்டர்களை நிறுத்தி ஏன் கோசம் போட வைக்க வேண்டும். தனி நபர்களுக்காக கட்சித் தொண்டர்களை பயன்படுத்தக்கூடாது, எனக் கூறினார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!