9 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு… கடலூரில் இயக்குநர் தங்கர்பச்சான் போட்டி.. காஞ்சிபுரத்திற்கு மட்டும் அறிவிக்காதது ஏன்..?

Author: Babu Lakshmanan
22 March 2024, 10:33 am
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் களமிறங்கும் பாமகவின் வேட்பாளர்களை வெளியிட்டது அக்கட்சியின் தலைமை.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக 20 தொகுதிகளில் களமிறங்குகிறது. அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும், மற்றும் சிறிய சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் வீதம் 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக தரப்பில் முதற்கட்டமாக 9 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று மாலை வெளியானது. இந்த நிலையில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக இன்று வெளியிட்டுள்ளது.

அதாவது,
திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் – தங்கர் பச்சான்,
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்,
தருமபுரி – அரசாங்கம்
சேலம் – ந. அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர்

காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் தனி தொகுதி என்பதால் பாமக சார்பில் தேர்வு செய்வதற்கு அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளையில், பாமக தலைவர் அன்பு ராமதாஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 98

0

0