திமுகவில் இருந்து ஜூட் விட காத்திருக்கும் கட்சிகள் : காங்கிரஸ் போட்ட குண்டு.. தவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 2:31 pm
DMK All
Quick Share

திமுகவில் இருந்து ஜூட் விட காத்திருக்கும் கட்சிகள் : காங்கிரஸ் போட்ட குண்டு.. தவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வலுவாக இருந்தது. தொகுதிகள் பங்கீடு தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே உடன்பாடானது.

இந்தநிலையில் தேர்தலுக்காகத்தான் கூட்டணி. முதலில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த பாருங்கள் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட வாரியாக சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில்தான், கொடுக்கும் நிலையில் இருந்த காங்கிரஸ் இடங்களை கெஞ்சி கேட்டு வாங்கும் நிலையில் உள்ளது. 57 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் என்று செல்வப் பெருந்தகை கூறினார்.

மேலும் படிக்க: அதிமுகவில் இணைந்து விட்டு ஜெ.,வை பற்றி புகழ்ந்து பேசுங்க : அண்ணாமலைக்கு செக் வைத்த ஆர்பி உதயகுமார்!

இதுபற்றி தி.மு.க. தரப்பில் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, காங்கிரசுக்கு புதிய தலைவர்கள் வரும் போது இந்த மாதிரி தங்கள் கருத்துக்களை பேசுவது வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டார்.

இந்த சூழலில் முன்னாள் மத்தியமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. நல்லாட்சி நடத்துகிறது. அதுவும் காமராஜர் ஆட்சிதான் என்றார்.

தலைவர்கள் வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்கள் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தலைவர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி வலிமையான கூட்டணி. இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதேநேரம் கீழ் மட்டத்தில் தங்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என்ற ஆதங்கமும் நிலவி வருகிறது.

எனவே விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.

இது திமுகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுகுக்கு இப்பேததே கூடுதல் இடங்கள் கேட்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் குரல்கள் மேலோங்கினால், மற்ற கட்சியினருக்கு பிரித்து கொடுத்து மீதியிருக்கும் தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் சூழலில் உள்ளது.

ஆனால் தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படி திமுக காங்கிரஸ் தவிரை மற்ற கட்சிகளுக்கு கறார் காட்டியதோ, அதே நிலைமைதான் இனி வரும் தேர்தல்களில் நடக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மீண்டும் இதே நிலை நீடித்தால் திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகுகிறதோ இல்லையோ, மற்ற கட்சிகளும் ஜூட் விட தயாராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Views: - 214

0

0