போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. பேரறிவாளன் விவகாரம்.. அண்ணாமலையை கிண்டலடித்த திமுக எம்பி…!!

Author: Babu Lakshmanan
18 May 2022, 4:16 pm

சென்னை: பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை வரவேற்று பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து திமுக எம்பி செந்தில்குமார் கருத்து தெரிவித்திருப்பது இருகட்சியினரிடையே மோதலை உண்டாக்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தார். தனது தண்டனையை எதிர்த்து இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில், தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PERARIVALAN - updatenews360

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திராவிட இயக்கங்களும், தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்த டுவிட்டர் பதிவில், “பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. ஒற்றுமை, பாதுகாப்பு நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்! என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்தக் கருத்திற்கு திமுக எம்பி செந்தில் குமார் பதிலளித்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில், ” தீர்ப்பே சொல்லியாச்சு நீங்கள் யாருங்க சார் ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாததற்கும். போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க. ஓ மீசையும் இல்லையா என்னால் உதவ முடியாது, மன்னித்து விடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் கருத்திற்கு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து பதிவு போட்டு வருகின்றனர். அதேவேளையில், திமுகவினரும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!