பிரதமர் மோடி நாளை சென்னையில் ரோட் ஷோ… முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 9:44 pm

பிரதமர் மோடி சென்னையில் ரோட் ஷோ நடத்தப்பட உள்ள நிலையில், நாளை பிற்பகல் முதல் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதில் 6 தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். அவை, தென்சென்னை, வேலூர், பெரம்பலூர், கோவை, நீலகிரி, விருதுநகர் ஆகியவை ஆகும். இந்த தொகுதிகளுக்கு முக்கியமான நிர்வாகிகளை களமிறக்கி விட்டுள்ளனர்.

மேலும் படிக்க: குஷ்பு ஒதுங்கியதற்கு ராதிகா காரணமா….? நட்டாவுக்கு கடிதம் எழுதிய ரகசியம்… அதிர்ச்சியில் தமிழக பாஜக!

இதன் ஒரு பகுதியாக, பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் ரோடு ஷோ காரணமாக பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொண்டு பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். மேலும் வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோருக்கும் ஆதரவு திரட்டுகிறார். இரவு கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார்.

பின்னர் ஏப்.,10ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு வேலூர் சென்றடைகிறார். வேலூர் பொதுக்கூட்டத்தில் அந்த தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பிற்பகல் 1.45 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறார். நீலகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பிரச்சாரத்தை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைகிறார்.

கீழ்க்காணும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது :
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுத்திப்பாரா செல்லும் வாகனங்கள், மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள், CIPET – அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்
வடபழனியில் -தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
CIPET -விமான நிலையம், காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
அண்ணா சிலையில் – மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!