கணவன் செய்த ப்ராங்க்…பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி மனைவி: கேரளாவில் விளையாட்டு வினையான சோகம்!!

Author: Rajesh
12 February 2022, 6:02 pm
Quick Share

கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் விளையாட்டாக வாயில் ஊற்றிய விஷத்தால் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே இருக்கும் ஆசாரி பரம்பு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீலஷ்மி என்ற பெண்ணை திருமணம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு துபாய் சென்ற அவினாஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன் மனைவியை பார்க்க ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்த நிலையில், துபாய் செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் ஸ்ரீலஷ்மி அவினாஸை மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில், அவினாஷ் கொரோனா காலம் என்பதால் 3 மாதம் விடுமுறை என்று பொய் கூறிவிட்டு இருந்துள்ளார்.

இந்த உண்மை லஷ்மிக்கு தெரிய வரவே அவர் கோபமடைந்து இதுகுறித்து கணவரிடம் சண்டையிட்டுள்ளார். அவினாஸ் மீண்டும் துபாய் போக வேண்டும் என்று தனது வாயில் விஷத்தை ஊற்றிக்கொண்டு, தலையில் அடித்து சத்தியம் வாங்கியுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக விஷம் வயிற்றுக்குள் சென்றதால் ஸ்ரீலஷ்மி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரீலஷ்மி அங்கே சிகிச்சை பலனின்றி பலியானார். இந்நிலையில் அவினாஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டாக சொன்ன பொய்யால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 526

0

0