இந்திரா காந்தி போல மம்தாவையும்…: அச்சுறுத்தும் பதிவு: கல்லூரி மாணவரை தட்டித் தூக்கிய போலீஸ்….!!

Author: Sudha
19 August 2024, 12:58 pm

சமூக வலைதளத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிராக பல்வேறு பதிவுகள் தொடர்ந்து வெளியாகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில், இந்திரா காந்தியைப் போல மம்தா பானர்ஜியையும்…என வாலிபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்திரா படுகொலையை நினைவூட்டி, அச்சுறுத்தல் விடும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன.எனவே மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

ஆர்ஜி கர் மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நபர் மூன்று பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவரை கைது செய்து விசாரிக்கிறோம்’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!