மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!

Author: Babu Lakshmanan
18 March 2022, 8:42 am
Quick Share

புதுச்சேரி : ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இளைய சமுதாயத்திற்கு காஷ்மீர் குறித்த உண்மை தற்போது தெரியவந்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை டிஜிபி சந்திரன், ஏடிஜிபி அனந்த மோகன், அரசு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.

முழுமையாக திரைப்படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “காஷ்மீரில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே தெரியும் அளவிற்கு இந்த திரைப்படம் அமைந்துள்ளது. சொந்த நாட்டில் காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளான கதை என்பது அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் இளைய சமுதாயத்திற்கு காஷ்மீர் குறித்த உண்மை தெரியவந்துள்ளது,” என்றார். மேலும் இத்திரைப்படத்தை கனத்த இதயத்தோடு பார்த்ததாகவும் தெரிவித்தார்.

Views: - 720

0

0