தள்ளிப்போகிறதா 10 மற்றும் +2 பொதுத்தேர்வு? இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 12:08 pm

தள்ளிப்போகிறதா 10 மற்றும் +2 பொதுத்தேர்வு? இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

மழையால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாவட்ட பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் திரும்பிய பிறகு மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுபவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்

சென்னை கோட்டூர்புரம் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வினா விடை புத்தகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்பொழுது அவர் பேசுகையில் ;

மாணவர்களுக்கு சுலபமாக 14 நாட்களுக்குள் சான்றிதழ்கள் கிடைக்க இந்த இணைய வழி சேவைகளானது தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்களின் உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையானது பொழிந்துள்ளது. இந்த மாவட்டங்களில் பெய்த மழையானது எதிர்பாராததாகும்.

சென்னையில் வழங்கப்பட்டது போல அங்கும் இணை இயக்குனர்களின் உதவியோடு பள்ளிகள் சீரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.

அங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த மழையானது தற்போது சற்று குறைந்துள்ளது. இதன் பிறகு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கணக்கிடப்பட்டு உடனடியாக சீரமைக்கப்படும்.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாவட்ட பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் திரும்பிய பிறகு மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

  • sasikumar freedom movie postponed due to financial issues ஃப்ரீடம்க்கு Freedom இல்லையா? சசிகுமார் திரைப்படம் வெளியாகாததற்கு இதுதான் காரணமா?