தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் பெருமை.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2023, 8:21 pm

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்க அதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புனிதமான செங்கோல், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படுகிறது.

குடியரசுத்தலைவர் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் திறப்புவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் அதிமுக இந்த திறப்பு விழாவில் பங்கேற்கிறது.

இந்த புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், சுதந்திரம் அடைந்த 75 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் மக்களாட்சியின் அடையாளமாக, புதிய பாராளுமன்ற கட்டிடம் இருக்கிறது.

மேலும் தங்கத்தால் ஆன செங்கோல் பாராளுமன்றத்தில் இடம்பெறுவது தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் நம் பாரம்பரியத்திற்கு உள்ள பெருமை. தமிழ்நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?