இளையராஜா பிரச்சனையை விடுங்க…. பிரதமர் மோடியே திராவிடர்தான் : ஒரே போடு போட்ட ஹெச்.ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 2:21 pm
Ilayaraja H raja -Updatenews360
Quick Share

மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் இணைப்பு தமிழ் என குரல் கொடுத்து வருகின்றனர்.

அதில் ஏஆர் ரகுமான் தமிழ்தான் இணைப்பு மொழி என கூறியதும் தமிழக மக்கள் அவரை கொண்டாடி வருககின்றனர். இந்த சூழலில் இளையராஜா சொன்ன கருத்துக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய இளையராஜாவை பலர் கடுமையாக சாடி வருகின்றனர். இளையராஜாவின் கருத்துக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகன்றனர்.

குறிப்பாக ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எச்.ராஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல ஏ.ஆர் ரகுமானின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய ஹெச்.ராஜா, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டுவந்து, அதன்மூலம் முன்னேற்றம் அவர்களை சென்றடைந்து இருக்கிறது. அம்பேத்கர் உயிரோடு இருந்தால் நிச்சயம் இதை பாராட்டியிருப்பார்’, என இசையமைப்பாளர் இளையராஜா தெளிவாக கூறியிருக்கிறார்.

இதற்காக இளையராஜா எதையோ எதிர்பார்த்து தான் இப்படி கருத்து சொல்லியிருக்கிறார் என்று பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லாருடைய மனதிலும் ஒரு மனமாற்றம் வரும். அப்படி ஒரு மாற்றம் ஒரு பிரபலமான நபருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்பதாலேயே இப்படி விமர்சனங்கள் எழுகின்றன… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘தமிழ் மொழி தான் இணைப்பு மொழியாக வரவேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்காக அவரது பெயர் தமிழா? இளையராஜா சொன்னது இயல்பானது ஆனால் ஏ.ஆர் ரகுமான் சொன்னது உள்நோக்கம் கொண்டது. இளையராஜா கருத்து சொல்ல அதிகாரம் உள்ளது. ஆனால் திராவிடியன் ஸ்டாக் தான் நினைக்கின்ற கருத்தை தான் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறது. பிரதமர் மோடி மீது தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். அதனால் இளையராஜாவின் கருத்து மாற்றி விடும் என்பதால் அவரை இழிவுபடுத்துகிறார்கள்.

திராவிடம் என்பது இனமா? இடமா? நானும் திராவிடன் தான், குஜராத் கூட திராவிட பிதேசம்தான், பிரதமர், எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாமலை என அனைவருமே திராவிடர்கள்தான்.

திராவிடர்கள்தான் தமிழ்நாட்டை ஆளுவார்கள், வேண்டுமென்றே மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர்.இது சரியில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 1வருடம் ஆக போகிறது. ஆனால் தன்னுடைய வாக்குறுதி குறித்து முயற்சி கூட செய்யவில்லை.

நீட்தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுவது வீண் முயற்சி, இது மக்களை ஏமாற்றும் முயற்சி. 2017ம் ஆண்டு இதே போல கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதி திருப்பி அனுப்பினார். மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநருக்கு காலக்கெடு என்பது கிடையாது என கூறினார்.

Views: - 725

0

0