தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கட்டாயம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு

Author: Babu Lakshmanan
29 June 2022, 4:12 pm

தமிழகத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2022-23ம் கல்வி ஆண்டையொட்டி கடந்த ஜுன் 13ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. கல்லூரிகள் ஜுலை 18 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்களை பள்ளி நிர்வாகமே பேருந்தில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. இதுபோன்ற சேவையின் போது, பல்வேறு விபத்துக்கள் நடந்திருப்பது வேதனையளிக்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

இப்படியிருக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பள்ளி வாகனங்கள் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம், மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டர் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!