ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : பிரதமர், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்? தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 8:50 pm
Arrest - Updatenews360
Quick Share

தஞ்சை : ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக அதன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜேஎம் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில் இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான ஒன்று அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவித்து ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது

இதையடுத்து ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தெற்கு மாவட்ட தலைவராக அதிரை ராஜிக் என்பவர் தலைமை வகித்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நெல்லையை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மான் என்பவர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறுகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் மோடியை தூக்கிலிட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் உணர்ச்சிவசப்படும் சமூகம், நீதிபதிகளுக்கு விபத்து ஏற்பட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் காரணம் என பேசியதோடு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவின.

அவரது பேச்சுக்கு பாஜக, இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி உள்ப பல்வேறு அமைப்புகள் கண்டன தெரிவித்த நிலையில் ஏரிப்புறக்கரை விஏஓ கௌரி சங்கர், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேற்று இரவு வல்லம் பகுதியில் ஜமால் முமகது உஸ்மானை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 945

0

0