செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்… கைதிகளின் அனைத்து விதிகளும் பொருந்தும் ; சிறைக் காவலர்…!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 11:46 am

செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை தொடர்ந்து, புழல் சிறை கைதிகளுக்கான அனைத்து விதிகளும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற கஸ்டடியை எதிர்த்து திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஆயுதப்படையின் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு, நேற்றிரவு 10 மணி முதல் சிறைத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். சுமார் 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என்று சிறைக்காவலர் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?