பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் : ரஜினியின் ஆசியுடன் பாஜகவில் பயணிப்பதாக அர்ஜுன மூர்த்தி பேட்டி..!!

Author: Babu Lakshmanan
22 August 2022, 4:15 pm
Quick Share

சென்னை : மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ரஜினியின் அரசியல் ஆலோசகர் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி. இவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த உடன், பாஜகவில் இருந்து விலகி, ரஜினி தொடங்கும் புதிய கட்சியில் இணைய தயாராகினார். மேலும், ரஜினிகாந்த் தொடங்கப் போகும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, அரசியல் கட்சி தொடங்கும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து, அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

இந்நிலையில், தான் தொடங்கிய புதிய கட்சியை கலைப்பதாக அறிவித்து விட்டு, மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை தலைமையில் அவர் மீண்டும் பாஜகவில் தன்னை இணைந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியுடன் ஆசியுடன் பாஜகவில் இணைந்ததாக கூறினார். ரஜினியின் அரசியல் ஆலோசகர் மீண்டும் பாஜகவில் இணைந்ததும், கடந்த சில நாட்களாக ரஜினியின் செயல்பாடுகளும், தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

Views: - 200

0

0