டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா? லாபத்தில் கொண்டு சென்றால் முதலமைச்சர் ராஜினாமா செய்ய தயாரா? அண்ணாமலை கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 7:49 pm
Annamalai Ask-Updatenews360
Quick Share

நீலகிரி, வால்பாறையில் உள்ள டேன்டீ தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அண்ணாமலை, முதன்முதலாக தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்று இலங்கையில் இருக்கக் கூடிய தலைமன்னார்க்கு அகதிகளாக கப்பலில் அழைத்து செல்லப்பட்ட போது ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர்.

பின்னர் சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் மீண்டும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக டேன் டீ என்பது குடியுரிமையுடன் தாயகம் திரும்பிய தழிழர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் டேன்டின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக தமிழக அரசு 5,315 ஏக்கரை வனத்துறைக்கு ஒப்படைப்பதாக கூறியிருப்பது வேதனையடையச் செய்துள்ளது.

டேன்டீயை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம்
எழுத்துப்பூர்வமாக எழுதி ஒப்படைத்துவிடுங்கள். டேன்டீ கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தால் நஷ்டத்தில் இயங்கும் நிர்வாகத்தை லாபத்தில் கொண்டு செல்வோம்.

அப்படி கொண்டு சென்றால் தமிழக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என முதல்வருக்கு சவால் விடுவதாக கூறினார். அதேப்போல் மின்சாரத்துறை லட்சம் கோடி கடனில் உள்ளது. ஆனால் டேன் டீ ரூ.218 கோடியில் மட்டுமே நஷ்டத்தில் உள்ளது. மின்துறை வேண்டும், டேன்டீ வேண்டாமா? என கூறினார்.

இலங்கைக்கு சென்று அவர்களுடன் இருந்து மக்களின் இன்னல்களை பார்த்து
வந்துள்ளேன். தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட பொதுத்துறைகள் சிறப்பாக
செயல்பட்டு வரும் நிலையில், டேன் டீ நிர்வாகத்தில் மட்டும் தான் தினக்கூலிகளாக தொழிலாளர்களை வைத்துள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இன்றும் குறைவான தினக்கூலி வழங்கப்படுகிறது. திட்டத்தினை மாற்றி அவர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என கூறினார்.

Views: - 400

0

0