எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 3:30 pm
Fisherman Released - Updatenews360
Quick Share

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று கடலுக்கு மீன் பிடிக்க 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்து ஏழு மீனவர்களை கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவர்களை இன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்,

இந்த நிலையில் சிறைக்காவல் தேதி முடிந்து இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 வரை விசாரணை நடத்திய இலங்கை நீதிமன்ற நீதிபதி ஏழு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Views: - 168

0

0