ஆளுநர் பதவி ராஜினாமா.. பாஜக வேட்பாளராகும் தமிழிசை : இந்த முறை குறி தூத்துக்குடிக்கு அல்ல..!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 12:37 pm
tamil
Quick Share

ஆளுநர் பதவி ராஜினாமா.. பாஜக வேட்பாளராகும் தமிழிசை : இந்த முறை குறி தூத்துக்குடிக்கு அல்ல..!!!

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வரிசையாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதுவரை வெளியிட்ட பட்டியல்களில் தமிழ்நாடு சார்பாக களமிறங்கும் வேட்பாளர்கள் பெயர் எதுவும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில்தான் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் எங்கே அவர் வேட்பாளராக களமிறக்கப்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆக்டிவ் அரசியலில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை 8 செப்டம்பர் 2019 அன்று தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின் 18 பிப்ரவரி 2021 அன்று தமிழிசை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அங்கே கனிமொழி 563,143 வாக்குகள் பெற்று வென்றார். அதே சமயம் தமிழிசை 215,934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில்தான் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தூத்துக்குடி அல்லது தென் சென்னை அல்லது நெல்லை அல்லது புதுச்சேரியில் இருந்து பாஜக வேட்பாளராக இவர் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • virat kohli தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!
  • Views: - 225

    0

    0