அமெரிக்காவில் ஆந்திர மாணவர் கொலை.. காட்டுக்குள் கிடந்த சடலம் : அடுத்தடுத்து நிகழும் மர்மம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 11:55 am

அமெரிக்காவில் ஆந்திர மாணவர் கொலை.. காட்டுக்குள் கிடந்த சடலம் : அடுத்தடுத்து நிகழும் மர்மம்!!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பருச்சூரி சக்ரதர் – ஸ்ரீலட்சுமி தம்பதி. இவர்களுக்கு பருச்சூரி அபிஜித் என்ற ஒரே ஒரு மகன் உள்ளார்.இவருக்கு வயது 20.

சிறுவயது முதலே அபிஜித் கல்வியில் சிறந்து விளங்கியதால்
வெளிநாட்டில் சென்று மேற்கல்வி பயில வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது.

ஆனால் வெளிநாட்டிற்கு அனுப்புவதில் தாய் தந்தையருக்கு விருப்பமில்லை. இருந்த போதும், மகனின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு அனுப்ப இருவரும் சம்மத் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் சேர இடம் கிடைத்ததால், அவர் அங்கு சென்று பயின்று வந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அபிஜித் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதிதியுள்ளது.

இந்நிலையில், அபிஜித்தின் மடிக்கணினி, பணத்திற்கு ஆசைப்பட்டு அவரைக் கொன்றிருக்கலாம் எனச் கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே அபிஜித் கொலை செய்யப்பட்டதால் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் வேறு மாணவர்களுடன் அவருக்குப் பிரச்சினை இருந்திருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உரிய நடைமுறைகளுக்குப் பிறகு அபிஜித்தின் உடல் குண்டூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் தொடர்ச்சியாக இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் மத்தியிலும், இந்தியாவிலுள்ள பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 9 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 1605

    0

    0