இபிஎஸ் கூறியது போல் அமையும் மெகா கூட்டணி? பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க அதிமுக சம்மதம்.. பரபர பின்னணி!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 11:24 am
admk pmk
Quick Share

இபிஎஸ் கூறியது போல் அமையும் மெகா கூட்டணி? பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க அதிமுக சம்மதம்.. பரபர பின்னணி!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து தொகுதி மற்றும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.

அடுத்த கட்சியாக உள்ள அதிமுக, தற்போது வரை தேமுதிக மற்றும் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவில் வரும் சட்டமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுவதாகவும், மத்தியில் மீண்டும் பாஜக வெல்லும் சூழல் இருப்பதாகவும் அதனால் பாஜகஉடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சர் பொறுப்பு வாங்கலாம் என பாஜக கூட்டணிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார் அன்புமணி ராமதாஸ் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன .

இறுதியில், டாக்டர் ராமதாஸ் கூறியதன்படி, பாமக எம்எல்ஏ அருள், நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விட்டு வந்துள்ளார். இதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமக சார்பில், பாஜக கூட்டணியில் 10 மக்களவை தொகுதி , 1 மாநிலங்களவை தொகுதி, 1 மத்திய அமைச்சர் பதவி என கேட்கட்பட்டதாகவும், அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை தொகுதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில், பாமகவுக்கு 10 மக்களவை தொகுதி, மாநிலங்களவை, மத்திய அமைச்சர் பதவி ஆகிய கோரிக்கைளை ஏற்க பாஜக தங்கியதாக தெரிகிறது. அதே நேரத்தில் அதிமுகவும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யாமல் காத்திருந்தது.

இறுதியில், அதிமுக – பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்றும், இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் , அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 100

0

0