திராவிட மாடலை அழிக்க வந்தவரே ஆர்என் ரவி தான் : ஹெச் ராஜா பரபரப்பு பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 9:12 pm
H Raja - Updatenews360
Quick Share

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தேவையின்றி பதற்றத்தை அமைச்சர் சேகர் பாபு ஏற்படுத்துகிறார். அவரை ஆள்கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்ய வேண்டுமென பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘’திராவிட தீயச்சக்திகள் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதே கிடையாது, இவர்களுக்கு ஒரு பெரிய அரிப்பு உள்ளது. நல்ல நடந்துக் கொண்டிருக்கும் நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும். அப்படி எண்ணித்தான் 2007-ம் ஆண்டு தில்லை சிற்றம்பலம், அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசு அபகரிக்க நினைத்தது. அதற்கு எதிராக அப்போது நீதிமன்றம் சென்ற போது அரசாங்கத்திடமே கேளுங்க என திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

சிதம்பரம் கோயில் மன்னர்களால் கட்டப்பட்டது என்கிறார்கள். அப்படி என்றால் அந்த கோயிலில் ஆள் கடத்தல் அல்லோலுயா சேகர்பாபுவுக்கு என்ன வேலை? சிதம்பரம் கோயிலை கட்டியது தீட்சிதர்கள் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால், இன்றைக்கு அவர்களே, மன்னர்கள் கட்டினார்கள் என மாற்றிப் பேசுகிறார்கள்.

இந்த கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது என பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆங்கிலேயர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது. பிராமணர்களில் பல பிரிவுகள் இருக்கிறது. அதெல்லாம் இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் பெரியாரே எனக்கு படிக்காத இந்த முட்டாள்கள் தான் வேணும் எனக் கேட்கிறார். அதையெல்லாம் மீறி இவர்கள் கையகப்படுத்த நினைக்கிறார்கள் ஆனால், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.

உங்களுக்கு இடமில்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அதில் எல்லாம் உண்டியல் வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். இவர்கள் எனக்கு பதில் சொல்லட்டும். அறம் கெட்ட இந்து சமய அறநிலையத்துறை, சிதம்பரம் நடராஜரை அழிப்பதற்காக இந்த ஆள்கடத்தல் சேகர் பாபு வந்துள்ளார். குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபரை கடத்தி 60 நாள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இதுதொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபியிடம் புகார் அளித்து சேகர்பாபுவை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்த உள்ளேன். இதற்கு முன்பு டிஜிபியாக ஒருத்தர் இருந்தார். அவர் சைக்கிளில் சென்று செல்ஃபி எடுப்பதற்கு மட்டுமே வேலையாக செய்து வந்தார். இப்போது புதிதாக வந்து இருப்பவர் சும்மா இருந்துவிடக் கூடாது. அதனால் அவருக்கு கொஞ்ச வேலைக் கொடுக்க வேண்டும்.

எந்தவிதமான கட்டணக் கொள்ளையும் இல்லாத கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த மாதிரியான கோயிலை தமிழகத்தில் வேறு எங்கையும் பார்க்க முடியாது. இந்த கோயிலை அழிக்க வேண்டுமென திட்டமிட்டு திமுக அரசாங்கம் செயல்படுகிறது. கோயில் பணத்தில் சாப்பிட வேண்டுமென இந்த தரம்கெட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள்” என்றார்.

Views: - 271

0

0