வாய்ப்பூட்டு போடுங்க… பேசக்கூடாது : ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு.. தனபாலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 7:01 pm
high - Updatenews360
Quick Share

வாய்ப்பூட்டு போடுங்க… பேசக்கூடாது : ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு.. தனபாலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு!!

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் அந்த வழக்கில் 11வது குற்றவாளியாக இருக்கிறார். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு கொடநாடு வழக்கு குறித்து அவர் பேட்டி அளித்து வருகிறார்

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், ‛‛எனது சகோதரர் கனகராஜ் என்னை சந்தித்தபோது 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க வேண்டும்” என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் தனபாலின் சகோதரருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதோடு கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி மஞ்சுளா முன், 19ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 251

0

0