சம்பா பயிர் காப்பீடு.. இன்றே கடைசி தேதி : விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு?!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2023, 11:57 am
Kharif - Updatenews360
Quick Share

சம்பா பயிர் காப்பீடு.. இன்றே கடைசி தேதி : விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு?!!

மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு பயிர் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு நவம்பர் 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானவர்கள் பயிர் காப்பீடு செய்தனர்.

ஆனாலும் கூட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டனர்.

இதனால் பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக தமிழக வேளாண் ஆணையம் எல்.சுப்பிரமணியன் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதிருந்தார்.

அதில் நவம்பர் 30 வரை பயிர் காப்பீடு தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு நவம்பர் 22ம் தேதி வரை பயிர் காப்பீட்டுக்கான தேதியை நீட்டிப்பு செய்து இருந்தார்.

இந்த நீட்டிக்கப்பட்ட தேதி என்பது இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீட்டை இன்றுக்குள் மேற்கொள்ள வேண்டும். இ சேவை மையங்கள் இந்த பயிர் காப்பீடு என்பது செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 197

0

0