பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகள் சரமாரி சண்டை… வைரலாகும் வீடியோ… தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
30 April 2022, 11:22 pm

மதுரை பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிகள் மாறி மாறி அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மை காலமாக பள்ளிகளில் மாணவர்கள் அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, வகுப்பறையில் பாடலுக்கு நடனம் ஆடுவதும், ஆசிரியர்களை அவமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும், ஆசிரியர்களை தாக்க முயல்வதும், தகாத வார்த்தைகளில் திட்டி பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், மாணவர்களிடையே கோஷ்டி மோதலும் நடந்தது. இதனால், பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகள் மீது கல்வி ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் இரு குழுவாக மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டனர். சரமாரியாக தாக்கி கொண்டதால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, சென்னையில் கல்லூரி மாணவிகள் மாறி மாறி அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறிய ஒரு சில தினங்களிலேயே பள்ளி மாணவிகள் தாக்கிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?