நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம் : ஓடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2024, 11:17 am

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த என்எல்சி மையத்தில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வந்தது. இந்நிலையில், நெய்வேலி என்எல்சி சுரங்கத்திற்குள் இரவு பணியில் ஈடுபட்டிருந்த மூலக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குழந்தைவேல்(45) மீது கனரக வாகனம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தைவேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!