கரூரில் காங்கிரஸ்க்கு சீட்..? கழுதையை ஒப்பிட்டு திமுகவினர் கடும் விமர்சனம்.. பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 5:59 pm

கரூரில் காங்கிரஸ்க்கு சீட்..? கழுதையை ஒப்பிட்டு திமுகவினர் கடும் விமர்சனம்.. பரபரப்பு!

கரூர் லோக்சபா தொகுதியில் கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. வேடசந்தூர்(திண்டுக்கல்), அரவக்குறிச்சி( கரூர்), கரூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), விராலிமலை (புதுக்கோட்டை), மணப்பாறை (திருச்சி) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கரூர் லோக்சபா தொகுதியானது 1957-ம் ஆண்டு முதல் 16 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 7 முறை வென்றுள்ளது.

அண்ணாதிமுக 6 முறை வென்றுள்ளது. திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் தலா 1 தேர்தலில் வென்றுள்ளன. 1957 முதல் 1984-ம் ஆண்டு வரை கரூர் லோக்சபா தொகுதி எம்பிக்கள் அறியப்படாத முகங்களாக இருந்தனர்.

அண்ணா திமுகவின் தம்பிதுரை 4 முறை இத்தொகுதியில் வென்று விஐபி தொகுதியாக்கினார். திமுகவின் சீனியர்களில் ஒருவரான கேசி பழனிசாமி 2004-ல் இத்தொகுதியில் வென்றார். டெல்லி காங்கிரஸ் மேலிடத்துடன் மிக நெருக்கமான ஜோதிமணி தற்போது கரூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார்.

கரூர் தொகுதியானது 4 திசைகளில் திரும்பி இருக்கும் மாவட்டங்களை உள்ளடக்கி இருப்பதால் எந்த ஒரு எம்பியாலும் 4 மாவட்ட சட்டசபை தொகுதிகளின் மக்கள் கோரிக்கையையும் முழுமையாக நிறைவேற்றி தர முடியாத நிலை இருக்கிறது என்பது கள நிலவரம். இம்முறை லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியை வழக்கம் போல திமுகவிடம் காங்கிரஸ் கேட்டு வருகிறது. திமுக ஒதுக்க நினைத்த 4 தொகுதிகளில் கரூர் இல்லைதான்; ஆனால் திமுக வாய்ப்புள்ள 6 அல்லது 7 தொகுதிகளில் கரூரும் ஒன்றாக இருக்கவே சான்ஸ் அதிகம்.

அதேநேரத்தில் காலம் காலமாக கரூர் லோக்சபா தொகுதியில் கூட்டணி கட்சிக்கே வேலைபார்ப்பதா? இதெல்லாம் சரிவராது.. அடுத்த தலைமுறை நாங்க வந்துட்டோம்.. எங்களை நம்பி திமுக வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும்..

நாங்க ஜெயிக்க வைக்கிறோம் என்கின்றனர் திமுக இளைஞர் பட்டாளம். இந்த கொந்தளிப்பைத்தான் தலைமைக்கு தெரிவிக்கும் வகையில், “கரூர் தொகுதியை காங்கிரஸ்-க்கு கொடுத்தால் எதிர்த்து நிற்பது கழுதையாக இருந்தாலும் சுலபமான வெற்றியை பெறும் …” திமுக ஆதரவாளர்களே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!