‘நீ பேனா சின்னம் வைத்தால் உடைப்பேன்’.. பள்ளிகளை சீரமைக்க இல்லாத பணம், இதுக்கு மட்டும் எங்கிருந்து வந்துச்சு : கொந்தளித்த சீமான்

Author: Babu Lakshmanan
31 January 2023, 1:27 pm
Quick Share

சென்னை : மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால், அவர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மெரினா கடற்பகுதிக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் வைத்தால், நானே ஒருநாள் அதனை உடைப்பேன் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசிய அவர், கடலுக்குள்ள தான் பேனா நினைவு சின்னம் வைக்கனுமா..?, அண்ணா அறிவாலயத்தில் வைக்கலாமே.. இல்லை நினைவு இடத்தில் கொண்டு போய் வை. அதைவிட்டுட்டு கடலுக்குள்ள தான் வைப்பீங்களோ. பள்ளிக்கூடங்களை சீரமைக்க காசு இல்ல, ரூ.81 கோடியில் பேனா நினைவு சின்னம் வைக்க மட்டும் எங்கிருந்து பணம் வந்துச்சு..? மீனவ சங்கங்கள் எதும் பாதுப்பில்லை என்று சொல்லலாம். ஆனால் 13 கிராம மீனவ மக்கள் பாதிப்படைவார்கள், என்று ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து, கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “மெரினா கடற்பகுதிக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்க்கிறேன். எழுதாத பேனாவுக்கு சிலை வைப்பது பகுத்தறிவு. எழுதும் பேனாவை ஆயுத பூஜைக்கு வைத்து கும்பிட்டால் மூடநம்பிக்கை; இது எப்படிபட்ட சித்தாந்தம்,” என திமுகவை கடுமையாக சாடினார்.

Views: - 638

0

0