உங்கள் யாருக்கும் தெரியாத ரகசியம்… திருமகன் ஈவெரா முதலில் எங்க கட்சிக்குத்தான் முதலில் வந்தார்… சீமான் சொன்ன புது தகவல்..!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 10:20 am
Quick Share

மறைந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, முதலில் நாம் தமிழர் கட்சியில் தான் சேர வந்ததாக அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.,27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:- கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்கிறார்கள். 90 வேண்டாம், 9 சதவீதம் நிறைவேற்றியதை சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை.

அதேபோல் 10 வருடம் ஆட்சியை நிறைவு செய்ய உள்ள பிரதமர் மோடியும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஏன்? கேள்வி கேட்பார்கள்… அவர்களிடம் பதில் இல்லை. நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அப்போது நாம் அவர்களிடம் திருப்பி கேள்வி கேட்போம். அவர்களிடம் பதில் இல்லை.

உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை இந்தக் கூட்டத்தின் மூலமாக கூறுகிறேன். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் முதலில் நம்ம கட்சியில் சேருவதற்காகத்தான் வந்தார். அப்புறம் அவருடைய ஐயா (இளங்கோவன்) என்ன சொன்னாரோ தெரியவில்லை. சரி நீ அங்கேயே இருப்பா என்று கூறி விட்டேன். அவர் இறந்ததில் எனக்கு மிகுந்த மனத்துயரம் தான். அவருடைய தந்தையிடம் அவர் காலமானதற்காக துக்கம் விசாரித்தேன்.

ஒன்றரை ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் இருந்தார் திருமகன். எதாவது மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் பேசியதை பார்த்ததுண்டா? அய்யா (இளங்கோவன்) போனாலும் பேசமாட்டார். எனவே மக்களின் பிரச்சனைகளை துணிந்து தெளிந்து பேசக்கூடிய ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும், என பேசினார்.

Views: - 241

0

0