புகைப்படத்தை மார்பிங் செய்து அவதூறு… அண்ணாமலையின் ‘வார் ரூம்’ தான் காரணம் : போலீஸில் காயத்ரி ரகுராம் பரபர புகார்!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 8:39 am
Quick Share

சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தனி தகவல் தொழில்நுட்ப பிரிவு தன்னைப்பற்றி தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் பரப்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் ஆகிய தனது புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் புகார் அளித்துள்ளார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு என்பவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிறகு பிரச்சினை குறித்து புகார் அளித்த பின்னர் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாகவும், தான் பாஜகவில் இருந்த போது பாஜக கட்சியில் தனக்கும், சில கட்சி பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் அறிந்து கொண்டு கட்சியிலிருந்து விலகியதாக கூறினார்.

தன் படத்தை தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாகவும், இதற்கு அண்ணாமலையின் தனி தகவல் தொழில் நுட்ப பிரிவு தான் காரணம் என தெரிவித்தார். அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பு ஏற்றதிலிருந்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் செயல்பாடுகள் தவறாகவும், தன்னை கொச்சையாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

Views: - 110

0

0