சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா? சாம்சங் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய சீமான்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 6:16 pm

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் உரையாற்றினார்.

சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து 32 வது நாட்களாக தொடர்ந்து காலை வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியா தெரிந்து கொண்ட மண்டபத்தில் அடைத்து வைத்தனர்

கைது செய்த தொழிலாளர்களை கூட்டணி கட்சியில் உள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவன் இடது சாரி கட்சி தலைவர்கள் கைது செய்ய தொழிலாளர்கள் சந்தித்து ஆதரவளித்த நிலையில்

இன்றும் தொழிலாளர்களை போராடக்கூடாது என்று காவல்துறையினர் காலையிலிருந்து தொழிலாளர்களை கைது செய்த வண்ணம் இருந்தனர்

அதையும் பொருட்படுத்தாமல் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுங்கா சத்திரம் பகுதி அருகே உள்ள மேல்போடவூர் பகுதியில் அமர்ந்து காலை வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க வந்தார்.

இன்னும் ஆறு மாத காலங்கள்தான் இந்த நெருக்கடியும் ஒடுக்க முறையும், சொப்பன சுந்தரி வெச்சிருந்த கார நீங்க வச்சிருக்கீங்க, இப்ப சொப்பன சுந்தரி யார் வச்சிருக்கா என்பது போன்று, ஆறு மாதங்கள் கடந்த பிறகு யார் யார் கூட்டணியில் சேரப் போகிறார்கள் என்பது மட்டுமே பார்க்கப்படுவார்கள் என்று சீமான் தொழிலாளர்கள் மத்தியில் உரையாடி வருகிறார்.

  • surya vijay sethupathi movie phoenix twitter review படத்தை பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது? பீனிக்ஸ் படத்தை கண்டபடி கிழிக்கும் ரசிகர்கள்!