நல்லவேளை அணிலால் தப்பினேன்… என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் : செல்லூர் ராஜு விமர்சனம்

Author: Babu
26 June 2021, 4:32 pm
senthil balaji - sellur raju - updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு முடியும் வரையில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். இதனை பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விமர்சித்தும், ஆதரவு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,”நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். தெர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று திமுகவினர் கிண்டல் செய்தனர். இப்போது, என்னை மிஞ்சி, அணிலை கண்டுபிடித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Sellur Raju - Updatenews360

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் வெளிநாடுகளுக்கு சென்ற அணில்கள், தற்போது தமிழகத்திற்கு படையெடுத்து வந்துவிட்டன. அவை மின் கம்பி மீது ஒடி வருவதை கண்டுபிடித்த அமைச்சருக்கு தான் நோபால் பரிசு வழங்க வேண்டும்,” எனக் கூறினார்.

Views: - 268

0

0