பாஜகவுக்கு தாவும் திமுக சீனியர் எம்பியின் வாரிசு… அதிர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்… ஓராண்டு ஆட்சி நிறைவு நாளில் இப்படியா..?

Author: Babu Lakshmanan
7 May 2022, 2:12 pm
Quick Share

திமுக எம்பியும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமான நிர்வாகியின் மகன் பாஜகவுக்கு தாவ இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலம் காலமாக திராவிட கட்சிகளே ஆண்டு வருகின்றன. அதிமுகவில் இருப்பவர்கள் திமுகவுக்கும், திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவுக்கும் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

அண்மை காலமாக கூட இந்த விஷயம் நடந்து வருகிறது. அதேவேளையில், அதிமுக, திமுகவைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு தாவுவதும் தற்போது அரங்கேறி வருகிறது.

Tamil Nadu: Former DMK MP K.P. Ramalingam joins BJP - The Week

பாஜகவை தமிழகத்தின் உள்ளே விடக் கூடாது என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கூறி வரும் நலையில், திமுகவின் முக்கிய தலைவர்களான துரைசாமி, கேபி ராமலிங்கம், மதுரை சரவணன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுக எம்பியும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி ஒருவரின் மகன் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அண்ணா அறிவாலயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்ற சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் சூர்யா இருந்து வந்தார்.

Annamalai DMk - Updatenews360

இதனால், தனது குடும்பத்தினர் பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தனது தந்தைக்கும், தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது கேரளாவில் இருப்பதால், அவர் தமிழகம் வந்ததும் அவரை சந்தித்து பாஜகவில் சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது திமுகவினரிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் திமுக செய்யும் அரசியல்களுக்கு அச்சாரமாக திகழ்ந்த தலைவர்களில் முக்கியமானவர் திருச்சி சிவா. மாணவப் பருவத்தில் இருந்து திமுகவுக்காக உழைத்து, தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் நெருக்கமான தலைவர்களில் ஒருவராகும் அளவுக்கு கட்சிக்காக பணியாற்றி வரும் திருச்சி சிவாவின் குடும்ப உறுப்பினரின் இந்த முடிவு திமுகவினரிடையே திகைப்படையச் செய்துள்ளது.

Views: - 837

0

0