அடங்காத வடகொரியா…மீண்டும் மீண்டும் ஆபத்தான ஏவுகணை சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு..!!

Author: Rajesh
7 May 2022, 2:00 pm
Quick Share

சியோல்: வடகொரியா அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை பரிசோதனையை இன்று நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை சோதனையை கிழக்கு கடலில் நடத்தியது. இந்நிலையில், வடகொரியா இன்று அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை பரிசோதனையை தனது கிழக்கு கடற்கரையில், அதாவது ஜப்பான் கடல்பகுதியை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ஏவியது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனை ஜப்பானின் கடலோர காவல்படை உறுதிபடுத்தியுள்ளது.

வடகொரியா சோதனை செய்த பொருள் ‘ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம்’ என்று ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இது வடகொரியா இந்த ஆண்டில் நடத்தியிருக்கும் 15வது ஏவுகணை சோதனை ஆகும்.

Views: - 1287

0

0