அமலாக்கத்துறை விசாரணைக்குள் வரும் செந்தில்பாலாஜி.. மேல்முறையீடு செய்ததில் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 11:37 am

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது.
அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்தநிலையில் மருத்துவமனைக்கே வந்த நீதிபதி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வசதியாக காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜியிடம் 15 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 8 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

அப்போது பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. அதன் படி காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்து செல்லக்கூடாது. மருத்துவர்களின் அனுமதியோடு விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த தீவிரம் காட்டியது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஓய்வு எடுத்து வருவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருவதால் விசாரணை நடத்த முடியாமல் அமலாக்கத்துறை தவித்து வருகிறது.

அதே நேரத்தில் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்திக்க வருபவர்களை அமலாக்கத்துறை கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்கவில்லையென நீதிமன்றத்தில் முறையிடவும் இந்த காரணத்தை முன்வைத்து ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் அடுத்த கட்டமாக அறுவை சிகிச்சை செய்த பிறகு ஒரு சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!