என் மீது குற்றமே இல்லை என கூறிய செந்தில் பாலாஜி : அமலாக்கத்துறை காட்டிய ஆதாரம்.. நீதிமன்றத்தில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 8:02 pm

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, பலத்த பாதுகாப்புடன் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு வந்தபோது, கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்படும் ஊசியுடன் இருந்தார்.

செந்தில் பாலாஜியை நாற்காலியில் அமர வைத்து, அவரிடம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி, குற்றச்சாட்டு பதிவை நீதிபதி அல்லி மேற்கொண்டார்.

தன் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார். தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம், செந்தில் பாலாஜி வாக்குவாதம் செய்ததால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?