அதிர்ச்சி… பின்னனி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம் : சோகத்தில் மூழ்கிய திரைப் பிரபலங்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 2:33 pm

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வந்த வாணி ஜெயராம் உயிரிழந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம் (78).

வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1971 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.

தேசிய விருதை மூன்று முறை வென்றுள்ளார் வாணி ஜெயராம். வீட்டில் நெற்றியில் காயத்தோடு வாணி இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தினத்தை ஒட்டி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!