தீபாவளிக்கு பிறகு வரும் சூரிய கிரகணம்… சென்னை, கொல்கத்தாவாசிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 10:01 pm
Quick Share

தீபாவளிக்கு மறுநாள் வரும் சூரிய கிரணகத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் 24ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகை முடிந்த மறுநாள், அதாவது, 25-ந் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும்.

சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 328

1

0