கெட்டுப் போன மட்டன், காலாவதியான மசாலா… தொக்கா மாட்டிய பிரபல பார்பிகுயின் : உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2022, 10:53 am
Barbequeen - Updatenews360
Quick Share

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பார்பி குயின் ஓட்டலில் சபரி என்ற வாடிக்கையாளர், மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்று பார்த்த போது, மட்டன்கிரேவி கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உணவை எடுத்துக்கொண்டு உணவகத்திற்கு வந்து திருப்பி கொடுத்துள்ளார்.

ஆனால் அங்கு வந்த மேலாளரிம் கூறிய போது, அவர் கெட்டு போயிருந்தால் கீழே ஊற்றி விடுங்கள் என்று மெத்தனமாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சபரி மேலாளிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் சபரி புகார் அளித்தார். இதையடுத்து அந்த ஓட்டலின் சமையலறையில் நுழைந்த அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து கெட்டுப் போன துர்நாற்றம் வீசிய 5 கிலோ எடையுள்ள மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சிகளை கைப்பற்றினர். வீணாப்போன பிரியாணியையும், சவர்மா மற்றும் கிரில் சிக்கனுடன் சேர்த்து வழங்க பல நாட்களுக்கு முன் போடப்பட்ட கெட்டுபோன மைதா ரொட்டிகளையும் கைப்பற்றி அழித்தனர்.

காலாவதி ஆன மசாலா பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் தன்மை குறித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் பார்பிகுயின் ஓட்டல் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் அபராதம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர். மக்கள் அதிகம் விரும்பும் இது போன்ற கடைகளில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 601

1

1