‘சிறு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’: தூத்துக்குடியில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!!

Author: Rajesh
6 March 2022, 10:09 pm

தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலையை திறந்து வைத்தபின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம்.

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை கழகம் காணாத மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தந்திருக்கிறீர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

வெற்றியை காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவரது சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன். கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக திருந்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?