ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை..! சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்…!!

Author: kavin kumar
26 January 2022, 10:13 pm

சென்னை: தமிழக தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும், இதுபோன்று 21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையர் வெளியிட்டுயிருந்தார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம், கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, செலவினங்களை கண்காணிப்பது, பறக்கும் படை அமைத்தல், பதற்றம் நிறைந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

  • coolie movie audio launch function on august first week இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை? ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் கூலி படக்குழு!